காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் செய்தி மிகவும் கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்பதாகவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தங்கள் முழு ஆதரவும் இருக்கும் என்றும், எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.