அமெரிக்க வரலாற்றில் நீண்ட நாள் நீடித்த அரசு முடக்கம் 43 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் சபையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. நீண்ட நாள் நீடித்த இந்த பொது முடக்கத்தால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வந்தனர். அதோடு, பலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். ஊழியர் பற்றாக்குறையால் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை அனைத்தும் சரி செய்யப்படவுள்ளன.