Donald Trump | China | ``அமெரிக்கா ஒன்றும் சர்வதேச நீதிபதி அல்ல..’’ - துளைத்தெடுத்த சீனா..
சர்வதேச போலீஸ் போல் எந்த நாடும் செயல்படக்கூடாது என்றும் எந்த நாடும் தன்னை தானே சர்வதேச நீதிபதியாக அனுமானித்து கொள்ளக்கூடாது என்றும் அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கை குறித்து ஐநாவில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் கலந்து கொண்ட சீனா, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு அனைத்து நாடுகளும் கீழ்ப்படிய வேண்டும் என்றும் குறிப்பாக பெரிய சக்திகள் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.