சாரல் போல் கொட்டிய பனிப்பொழிவு - மலை மீது ஏறி ரசித்த மக்கள்
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை போல் சாரலாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரிய நிகழ்வாகக் கூறும் மக்கள்... சாரல் போல் கொட்டிய பனிப்பொழிவில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...புயல் எச்சரிக்கை காரணமாக பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள 32 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு இருக்கும் என கூறி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, கலைக்குப் பெயர்போன பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமாக அறியப்படும் மொண்ட்மார்ட்ரே (Montmarte) மலை பகுதியின் வெண்ணிற அழகை உள்ளூர் வாசிகள் மலை மீது ஏறி ரசித்து வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story
