Protest | Jerusalem | திடீரென போராட்ட கூட்டத்திற்குள் புகுந்த பேருந்து - பறிபோன சிறுவன் உயிர்

Update: 2026-01-07 09:22 GMT

யூத போராட்டத்திற்குள் புகுந்த பேருந்து மோதி சிறுவன் பலி

ஜெருசலேமில் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கு எதிராக ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் நடத்திய போராட்டத்தின் போது பேருந்து மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். முன்பு ஆர்த்தடாக்ஸ் யூதர்களுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணுவத்தில் ஆள் பற்றாகுறையால் ஆர்த்தடாக்ஸ் யூதர்களையும் ராணுவத்தில் சேர்க்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் பேருந்து ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஒரு சிறுவன் கொல்லப்பட்ட நிலையில், போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்