டொனால்டு டிரம்ப் உடன் உக்ரைன் அதிபர் இன்று சந்திப்பு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வாஷிங்டனில் திங்கள்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பில், ஜெலன்ஸ்கியுடன் ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் (Ursula von der Leyen) ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை ஜெர்மனி பிரதமரும், ஐரோப்பிய ஆணையத் தலைவரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.