al-Qaeda | அல்-கொய்தா முக்கிய தலைவர் கொலை அமெரிக்கா பதிலடி

Update: 2026-01-19 05:06 GMT

சிரியாவில் அமெரிக்கர்களை குறிவைத்து கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய அல்-கொய்தா துணை அமைப்பின் தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். சிரியாவின் பால்மைராவில் டிசம்பர் 13 அன்று அமெரிக்க மற்றும் சிரியப் படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பதிலடியாக பிலால் ஹசன் அல்-ஜாசிம் கொல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 13 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க படைகள் சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தளங்களை தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்