கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதித்தார். டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு பிப்ரவரி முதல் கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி காட்டியுள்ளன.