Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.01.2026) | 6 PM Headlines | Thanthi TV
- சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக, தவெக இணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.. விசாரணை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்...
- ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியா வருகை... டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார்..
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது... கடந்த 12ஆம் தேதி ஆஜரான விஜயிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது...
- பிரசார வாகனத்தின் மேலிருந்து கூட்ட நெரிசலை பார்க்க முடியவில்லையா? தண்ணீர் பாட்டிலை வீசும் போது ஆம்புலன்ஸை பார்க்கவில்லையா? என்று விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்...
- விஜய்யின் தெறி படம் ரீ ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது... வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருந்த நிலையில், திரௌபதி-2 பட இயக்குநர் மோகன்.ஜியின் கோரிக்கையை ஏற்று தள்ளிவைக்கப்பட்டது...
- டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா வந்து விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி மறுத்துள்ள விவகாரம்... வங்கதேசத்திற்கு பதில் வேறு ஒரு அணி மாற்றப்படலாம் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்தை ஐசிசி எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.