புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்.. இங்கிலாந்து போர்விமானங்களுக்கு ஏற்பட்ட கதி
இங்கிலாந்தில், ராணுவ விமானத்தை, பாலஸ்தீன ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்டர்டான் (CARTERTON) பகுதியில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் மையத்திற்குள் அத்துமீறி 2 பாலஸ்தீன ஆதரவாளர்கள் இருசக்கர வாகனம் மூலம் உள்ளே நுழைந்தனர். அங்கு, எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ விமானங்கள் மீது சிவப்பு நிற பெயின்டை எஞ்சின் மீது அடித்துவிட்டு, பின்னர், கம்பியால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
ஈரானுக்கு எதிராக, இஸ்ரேலிய படைக்கு ஆதரவாக, இங்கிலாந்தின் ராணுவ விமானங்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், மக்களின் உயிரை காக்க போராடும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.