கிரீன்லாந்து டென்மார்க்கின் இயற்கையான பகுதி அல்ல என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்கா - ஐரோப்பா இடையே அதிகரித்து வரும் பிளவு ரஷ்யாவை மகிழ்ச்சி அடைய செய்துள்ள நிலையில், இது தொடர்பாக பதிலளித்த அவர், கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யா தலையிட விரும்பவில்லை என்றும் கிரீன்லாந்தை கைப்பற்ற ரஷ்யாவும் விரும்புவதாக கூறிய டிரம்பின் கூற்றையும் மறுத்தார்.