Venezuela | Trump | டிரம்ப் மூலம் கிடைத்த லாபம்.. இத்தனை கோடியா..! - ஓப்பனாக சொன்ன வெனிசுலா

Update: 2026-01-21 11:11 GMT

வெனிசுலா எண்ணெய் விற்பனையின் மூலம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக

அந்த நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 5 கோடி

பேரல் எண்ணெய் ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுலாவுக்கு கிடைத்த முதல் வருவாய் இதுவாகும். இந்த ஒப்பந்தம், இம்மாத துவக்கத்தில் வெனிசுவேலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா அந்த 5 கோடி பேரல் எண்ணெயை வெனிசுலாவிடமிருந்து கைப்பற்றி, உலக சந்தையில் விற்பனை செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால், கப்பல் போக்குவரத்து பதிவுகளின்படி, அந்த எண்ணெய் இதுவரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்