கை விலங்கு மாட்டி இழுத்து செல்லப்பட்ட இலங்கை Ex அதிபர் ரணில்

Update: 2025-08-23 08:44 GMT

கை விலங்குடன் சிறை சென்ற ரணில் விக்ரமசிங்கே

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை போலீசார் கைது செய்து, கைவிலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்தபோது, தனது மனைவிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு நிதியில் பயணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் அரசுமுறைப் பயணத்திற்குப்பின் இங்கிலாந்தில் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக எழுந்த புகார் தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், விக்ரமசிங்கேவை கைது செய்த போலீசார், கைவிலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். அவரை வரும் 26-ம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறைச்சாலை மருத்துவமனையில் ரணில் விக்ரமசிங்கே அனுமதிக்கப்பட்டார்.​

இதனிடையே, கொழும்பு நீதிமன்ற பகுதியில் ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்