குற்ற வழக்குகளில் சடலங்களை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்க உதவுவதற்காக அழுகி வரும் எலும்புகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை மட்டும் தனியாக பாட்டில்களில் அடைக்கும் வினோத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர். குறைவான வாசனை மூலக்கூறுகள் கொண்ட Cadaver நாய்களின் மோப்ப சக்தியை அதிகரிக்க இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர் மார்ட்டின் தெரிவிக்கையில், உயிரிழந்த நபரின் உடலில் உள்ள மென்மையான திசுக்கள் அழுக தொடங்கியதும், அதில் உள்ள வாசனை மூலக்கூறுகள் குறைய தொடங்கும் என்பதால் உயிரிழந்து மூன்று ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான மனித எலும்புகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.