“புதிய ஐநா அமைப்பை உருவாக்க டிரம்ப் முயற்சி“
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை மையமாகக் கொண்டு செயல்படும் புதிய ஐக்கிய நாடுகள் அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக பிரேசில் அதிபர் லுலா குற்றம் சாட்டியுள்ளார்... ட்ரம்ப்பால் தொடங்கப்பட்ட அமைதி வாரிய அமைப்பு, தற்போதைய ஐநாவுக்கு போட்டியாகவோ
அல்லது அதன் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் வகையிலோ அமையலாம் என ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக சேர விரும்பும் நாடுகள் ஒவ்வொன்றும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதனால்,அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளில் சில இந்த அமைப்பில் சேர தயக்கம் காட்டி வருகின்றன.