Landslide | "யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை" - மனித சடலங்களும், உடல் பாகங்களும்..
New Zealand Landslide | "யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை" - மனித சடலங்களும், உடல் பாகங்களும்.. நிலச்சரிவால் நேர்ந்த கோரம்
நியூசிலாந்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கியவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மவுன்ட் மவுகானி பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில், கனமழையால் நேற்று முன் தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில், 2 இளைஞர்கள் உட்பட 6 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர். மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணி நிறுத்தப்பட்டு, தற்போது சடலங்களை மீட்கும் நடவடிக்கை மட்டுமே நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, அருகிலுள்ள பப்பமோவா பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.