Bangladesh | ``NO முடியவே முடியாது’’.. கதவை அடைத்த வங்கதேசம் - கவலையில் இதயம் நொந்த அமெரிக்கா
தடை காரணமாக பிப்ரவரி 2026ல் நடைபெறும் வங்கதேச தேர்தலில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாது என்பதை வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான ஷஃபிகுல், கடிதம் குறித்து தமக்கு தெரியாது என்று பதிலளித்தார்.