Twins | Baby | சோகத்தில் தொடங்கி மகிழ்ச்சியில் முடிந்த பிறப்பு - நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!

Update: 2025-12-27 07:36 GMT

பெரு நாட்டில், முதுகெலும்புடன் ஒட்டிப் பிறந்த சுமார் இரண்டரை மாதங்களே ஆன, இரட்டை பெண் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

இரட்டை குழந்தைகளின் பெற்றோர்களான மெனெலியோ Menelio, மார்லெனிக்கு Marleni கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி குறைப்பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்ததால் பெற்றோர் சோகமடைந்தனர்.

இந்நிலையில், பெரு தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்