உக்ரைன் தேசத்தில் புதின் மூட்டிய தீ.. கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜெலன்ஸ்கி
உக்ரைனின் கார்கிவ் Kharkiv பகுதியில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 பேர் காயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ட்ரோன்கள் மோதியதில் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது. மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.