Venezuela | Trump | USA | America | டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-12-17 06:22 GMT

வெனிசுலாவிற்குள் நுழையும் அல்லது அ​ங்கிருந்து வெளியேறும் தடை செய்யப்பட்ட அனைத்து கச்சா எண்ணெய் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் நிதியை திரட்டி போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் உள்ளிட்டவற்றில் வெனிசுலா ஈடுபடுவதாகவும், வெனிசுலா ஆட்சியாளர்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக கருதுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தென்அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கடற்படையால் வெனிசுலா சூழப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய் உள்ளிட்ட வளங்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், வெனிசுலாவின் இயற்கை வளங்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டினார். வெனிசுலாவை பாதுகாக்க தாங்கள் சத்தியம் செய்துள்ளதாகவும், அமைதி வெல்லும் என்றும் மதுரோ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்