ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முயற்சித்ததாக பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் டக்கர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான முடிவில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிடிவாதம் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரத்தை டக்கர் கார்ல்சன் வெளியிடாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான அவரின் இந்த கூற்று குறித்த நம்பகத்தன்மை பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.