North Korea | Missile | "உலகை அதிரவைத்த வடகொரியா - 5 வருஷத்துக்கு இதுதான் பிளான்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை மேற்கொள்ள வடகொரியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடிக்கடி கடலில் ஏவி, சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான ஏவுகணைகளுக்கான தளவாடங்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். இதேபோல, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதிலும் வடகொரியா முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.