Jerusalem Attack | ஜெருசலேமில் நடந்தது என்ன? - பயங்கர கோபத்தில் ஸ்பாட்டுக்கு வந்த நெதன்யாகு

Update: 2025-09-09 08:30 GMT

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார். காரில் வந்த இரு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் ராமோட் சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு எவ்வித அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணிகள் இஸ்ரேல் போலீசாருடன் இணைந்து ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்