நெருங்கும் அந்த `தேதி’ எப்படியாவது தடுக்க போராடும் ஈரான்

Update: 2025-07-26 04:42 GMT

ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை

துருக்கியில் ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. துருக்கி தலைநகரான இஸ்தான்புலில் உள்ள ஈரான் துணை தூதரகத்தில் வைத்து ஐரோப்பாவின் இ3 குழு என அழைக்கப்படும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி பிரதிநிதிகளுடனும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடனும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் அணுசக்தி திட்டத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்து, ஈரான் மீதான பொருளாதார தடைகளை கடந்த 2015 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீக்கியிருந்தன. இது தொடர்பான தீர்மானம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி காலாவதியாக உள்ள நிலையில், பொருளாதார தடைகளை தவிர்க்க ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் மேற்கொள்ளும் சமரச முயற்சியின் அளவீடாக இந்த பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்