அமெரிக்காவில் இந்தியர் தலை அறுத்து படுகொலை - டிரம்ப் சொன்ன வார்த்தை

Update: 2025-09-15 10:13 GMT

#trump #americaindia

அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டித்து படுகொலை - டிரம்ப் உறுதி

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா படுகொலை சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸில் பணியாற்றி வந்த சந்திரமவுலி நாகமல்லையா என்பவர், சக ஊழியரான கியூபாவை சேர்ந்த கோபோஸ் என்பவரால் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கொலையாளி மீது, ஏற்கனவே குற்ற வழக்குகள் இருந்ததாகவும், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது காவலில் உள்ள அந்த நபர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சட்டத்தின்படி கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகள் மீது மென்மையாக நடந்துகொள்ளும் நேரம் முடிந்துவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்