USA | உலகிலேயே முதல்முறையாக `பங்கர் பஸ்டர்’ அரக்கனை போரில் இறக்கிய அமெரிக்கா - சிதறிய ஈரான் நிலம்
உலகிலேயே முதல்முறையாக `பங்கர் பஸ்டர்’ அரக்கனை போரில் இறக்கிய அமெரிக்கா - சிதறிய ஈரான் நிலம்
அமெரிக்காவின் தாக்குதல் மூர்க்கத்தனமானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களை தாக்கியதன் மூலம், ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கடுமையாக மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் தனது இறையாண்மை, நலன் மற்றும் மக்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் கொண்டிருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.