போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பை, நாளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், போர் நிறுத்தத்துக்காக டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகளில் 90 சதவீதத்தை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். புத்தாண்டுக்கு முன் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.