இந்தியாவில் சிக்கிய உலகின் பவர்ஃபுல் F-35 போர் விமானம் மீட்க போராடும் பிரிட்டன்..நடந்தது என்ன?
இந்தியாவில் சிக்கிய உலகின்
பவர்ஃபுல் F-35 போர் விமானம்
மீட்க போராடும் பிரிட்டன்...நடந்தது என்ன?
கேரளால கடந்த 20 நாட்களா சிக்கி தவிச்சிடுருக்கும் பிரிட்டன் கடற்படையோட F-35 போர் விமானம் பழுது பார்க்க முடியாத அளவுக்கு மோசமா இருக்கரது உலகலாவிய கவனத்த ஈர்த்தது மட்டுமில்லாம கடவுளின் தேசமான கேரளாவுல இருந்து பிரிய மனசில்லயோ அந்த விமானத்துக்குன்னு சமூக வலைதளத்துல நெட்டிசன்ஸ் மீம்ஸ்கள போட்டுட்டு வர்ரதயும் பார்க்க முடியுது. இந்த நிலையில சரக்கு விமானத்துல அந்த F-35 போர் விமானத்த ஏத்தி அனுப்புரதுக்கான சாத்தியகூறுகள் ஆராயப்பட்டுட்டு வருது. அத பத்தி விரிவா பார்க்கலாம்.
பிரிட்டன் ரயல் கடற்படையோட இந்த F-35பி போர் விமானம் போன மாசம் 14 ஆம் தேதி கேரள மாநிலத்துல இருக்கர திருவனந்தபுரத்துல அவசர அவசரமா தரையிறக்கப்பட்டுச்சு.
இந்த F-35பி போர் விமானம் பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசரோட கடற்படை குழுல இருக்கர விமானம். இந்தோ பசிபிக் கடற்பகுதியில இந்திய கடற்படையோட கூட்டு பயிற்சில ஈடுபட்டு வந்த நிலையில தரையிறக்கப்பட்டிருக்கு.
என்ன காரனத்துனால இப்படி அவசரமா தரையிறக்கப்பட்டுச்சுன்னு கேட்டா விமானத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாததால தரையிரக்க நேரிட்டதா விமானி தரப்புல சொல்லப்பட்டுச்சு. ஆனா விமானத்தோட எந்திரத்துல தான் பிரச்சினை. அத சரி செஞ்சுட்டு திருப்பி அனுப்பலாம்னு அதுக்கான முயற்சிகள் நடந்து வந்தது. 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானத்த 24 மணி நேரமும் பிரிட்டன் ராயல் விமானபடைய சேர்ந்த 6 அதிகாரிகள் பாதுகாத்துட்டு வராங்க.
ஒரு வெளிநாட்டு விமானம் 48 மணி நேர்த்த கடந்து இன்னொரு நாட்டுல இருக்கரதே அரிதான நிகழ்வா பார்க்கப்படுது. அதுவும் F-35 ரக விமானங்கள் உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்கள்ள ஒன்னு. அதுலயும் குறிப்பா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்ள இதுவே விலை உயர்ந்தது. இதுல 3 ரகங்கள் இருக்கு F-35ஏ,பி,சி. அதுல திருவனந்தபுரத்துல இருக்கரது F-35பி .இந்த விமானத்தால குறுகிய ஓடுபதையில ஏரவும் முடியும் அதே போல செங்குத்தான பகுதியில இறங்கவும் முடியும்.
அமெரிக்காவோட Lockheed Martin நிறுவன தயாரிப்பான இந்த வை போர் விமானம் ரேடார், அகச்சிவப்பு அமைப்பிகள் வெளிப்புற உள்ளீடுகள் இதெல்லாத்தையும் பயன்படுத்தி இலக்குகள சரியா குறிவைக்கும். அதுமட்டும் இல்லாம இது ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்ஸ்னு சொல்லுவாக்க. அதாவது ரேடார் கண்கள்ள படாம இலக்க தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த விமானத்துல ஒரு விமானி மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த F-35 போர் விமானத்த சுமார் 12 நாடுகள் பயன்படுத்தராங்க. முக்கியமா அமெரிக்கா,இங்கிலாந்து,இஸ்ரேல்,ஜப்பான்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்ள சிறப்பு வாய்ந்த விமானம்னு சொல்லப்படர இந்த F-35 ரக விமானங்கள் இந்தியா கிட்ட கிடையாது.
இந்த ஆண்டோட தொடக்குத்துல கூட பிரதமர் மோடியுடனான சந்திப்புல இந்த F-35 விமானத்த இந்தியாவுக்கு விற்பனை செய்யரதுக்கான சாத்தியகூறுகள் பத்தி பேச்சுவார்த்தை நடத்தப்படும்னு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லிருந்தாரு. ஆனா இதுவரைக்கும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகல.
முதல்ல எரிபொருள் இல்லன்னு தரையிறக்குனாலும் அடுத்து தொழில்நுட்ப கோளாறு தான்னும் அத விரைவுல சரி செஞ்சுடலாம்னு பார்க்க பட்டுச்சு. ஆனா இப்ப வரைக்கும் பழுது சரி செய்யப்படாததால நிறுத்தப்பட்ட F-35 விமானத்த பழுது பார்த்து எடுத்துட்டு போரதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுன்னு தான் சொல்லப்படுது. அதுமட்டுமில்லாம விமான மீட்புக்கான தெளிவான காலக்கெட்வும் கொடுக்கமுடியாததால மார்று வழிகள ஆராஞ்சுட்டு வர்ராங்க.
சரி இப்ப அடுத்து என்ன தான் பன்னலாம்னு யோசிச்ச பொறியியலாலர்கள் இன்னொரு பெரிய சரக்கு விமானத்துல F-35 போர் விமானத்த இங்கிலாந்துக்கு எடுத்துட்டு போகமுடிவு செய்யப்பட்டிருப்பதாவும் அதுக்கான வழிகள் பத்தி ஆராஞ்சுட்டு வர்ரதாவும் தகவல் வெளியாகிருக்கு.
இந்த F-35பி விமானத்த இங்கிலந்துக்கு கொண்டு போகரதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கு C-17 Globemaster III சரக்கு விமானம். இத இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கனரக தூக்கும் சரக்கு விமானமா பயன்படுத்திட்டு வர்ரதா சொல்லப்படுது. தோராயமா 77 டன் எடை கொண்ட இந்த சரக்கு விமானம் இரண்டு F-35 விமானக்கள்ள கூட சுமந்து செல்லக்கூடிய திறன் வாய்ந்ததா பொறியியலாளர்கள் சொல்ராங்க.
ஆனா இப்ப பிரச்சினை என்னன்னா, இந்த சரக்கு விமானத்தோட ஒட்டுமொத்த நீளத்துல சரக்கு பிடிப்பு நீளம்னு பார்த்தா அது 26 மீட்டர் அதே போல அகலம் வெறும் 4 மீட்டர் தான். ஆனா F-35 விமானத்தோட நீளம் என்னமோ 14 மீட்டர் தான் ஆனா அதோட இறக்கைகள் மட்டுமே 11 மீட்டர் அகலம் கொண்டதுந்னு சொல்லப்படுது.
அதனால F-35 ஓட இறக்கைகள அகற்றி எடுத்துட்டுபோரது மட்டும் தான் ஒரே வழின்னு சொல்லப்படுது. இது கேட்க்கரதுக்கு வெறும் இரக்கைகள் தானேன்னு அதுனால சுலபமா இருக்கும்னு தோணலாம். ஆனா அது எளிதான செயல்முறை இல்லன்னும் விமான பாதுகப்பு நிபுனர்கள் சொல்ராங்க. இது ஒரு பக்கம் இருந்தாலும் இதுக்கு முன்னாடி F-35ஏ போர் விமானம் இதே கேரளாவுல இருந்து இறக்கைகள் அகற்றப்பட்டு C-17 Globemaster III மூலமா கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டுருக்கு. அதனால இரக்கைகள் அகற்றது இது முதல் மமுறை கிடையாதுன்னும் ஒரு கூற்று இருக்கு. எது எப்படியோ மிக விரைவுல இந்த போர் விமானத்த அதோட வீடான இங்கிலந்துக்கு எடுத்துட்டு போகர வேலை மும்முரமா நடந்துட்டு வருது.