இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

Update: 2025-07-30 03:13 GMT

காசா மீதான போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் கெயர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். காசாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, நீண்ட கால நிலையான அமைதிக்கு இஸ்ரேல் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காசாவில் நிலவும் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அவர்களுக்கான உதவிகள் கிடைப்பதற்கும் பிரிட்டன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அதைத்தான் பிரிட்டன் மக்கள் பார்க்க விரும்புவதாகும் பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்