Brazil | Rahul | அரசியலில் பரபரப்பை கிளப்பிய ராகுல்.. அடுத்த நாளே வீடியோ வெளியிட்ட பிரேசில் நடிகை

Update: 2025-11-06 10:46 GMT

ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் 22 முறை பயன்படுத்தப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியதற்கு, அந்தப் பெண் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கும் இந்திய அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். தனது புகைப்படத்தை அனுமதியின்றி சமூக வலைதளத்தில் வாங்கி பயன்படுத்தியிருப்பதாக கூறிய அவர், ஒருபோதும் தாம் இந்தியா வந்ததில்லை என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மாடல் அழகியான அவர், தற்போது சிகை அலங்கார நிபுணராகவும், டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சராகவும் வலம் வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்