ட்ரம்பின் ஆக்சன் எதிரொலி... எல்லையில் படைகள் குவிப்பு... மெக்ஸிகோ ரியாக்சன்... தொற்றிய பதற்றம்
தற்காலிக ஒப்பந்தம் அடிப்படையில், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum), சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் இறக்குமதி வரியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோ எல்லையில் சுமார் 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.