ரஷ்யா விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என டிரம்ப் கொடுத்த அப்டேட்
ரஷ்யா விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்குமாறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் டிரம்பின் சிறப்பு தூதரான ஸ்டீவ் விட்காஃப் சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்