88 முறை ஒலித்த மணிகள்.. இரவே மூடப்படும் சவப்பெட்டி - போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு பற்றிய தகவல்கள்

Update: 2025-04-21 14:49 GMT

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ் காலமானார்.. 88 வயதான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் மறைந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது... நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களை சந்தித்து ஆசி வழங்கினார். இந்த சூழலில் திடீர் உடல்நலக் குறைவால் அவர் காலமானார்... தென் அமெரிக்காவில் இருந்து முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது... அவரது மறைவால் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்