Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (11.06.2025) | Thanthi TV

Update: 2025-06-11 16:45 GMT

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 6 நாட்களுக்கு கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,

வெள்ளிக்கிழமையன்று, கோவை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சனிக்கிழமையன்று, கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



ஜூலை ஒன்றாம் தேதி முதல், ஆதார் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார் உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் திட்டத்தின் பலன்களை இறுதிப் பயனர்கள் பெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு நேரடியாக முன்பதிவு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்