Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20.01.2026) | 7PM Headlines | ThanthiTV
- ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ர்ந்துள்ளது...காலையில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் 2 ஆயிரத்து 320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது...
- ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று தொடர்பான வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது...அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
- ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது...சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் முடிவெடுக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- சென்சார் போர்டு அறிவுறுத்தலின் படி, ஜனநாயகன் படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. புகார் வந்ததால் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தாதாகவும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது...
- ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கில் தயாரிப்பு நிறுவனம், சென்சார் போர்டு இடையே காரசார விவாதம் நடைபெற்றது...நீக்கப்பட்ட காட்சிகளையே மீண்டும் நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது...படத்தை பார்வையிட்ட குழுவினர், ஒருமனதாக சான்று வழங்க பரிந்துரைத்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது...
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்தார்....தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
- நூற்றாண்டு கால மரபுகளையும், பாரம்பரியத்தை கொண்ட தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, அவமதித்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்...ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா கூறினாலும், அந்த பதவிக்கு மதிப்பு கொடுத்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்...
- ஆளுநர் உரை அவையில் படிக்கப்பட்டதாக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்...முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது...
- சட்டமன்றத்தில் தாம், பேசும்போது ஒலிபெருக்கி அனைக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்...தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட உரையில் ஆதாரமன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்...
- மக்களை பாதிக்கும் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் அரசின் உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்...வெளிநாடுகளில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுவதில் உண்மை இல்லை என்றும அவர் விமர்சித்துள்ளார்...
- தமிழகத்தில் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்...இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழகம் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்...
- சட்டப்பேரவையில் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியது, தவறான தகவல் என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்...வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த ஆளுநரின் கருத்தும் உண்மைக்கு புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார்...
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் ட்ரோன் பறக்கவிடவும், ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டதும், ரீல்ஸ் எடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
- தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அமமுக மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் நாளை ஆலோசனை மேற்கோள்கிறார்...NDA கூட்டணியில் அமமுக இடம் பெற போவதாக தகவல் பரவி வரும் நிலையில், அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
- மகளிர் வாக்கை அதிகம் குறி வைக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 10 மகளிர் அணி நிர்வாகிகளை திமுக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒரு மாத காலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கையை வழங்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது...
- சபரிமலை தங்கக் கடத்தல் வழக்கில், கேரள மாநிலம் முழுவதும் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது...தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முரளி பாபு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்...