- தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க ஆயிரத்து 211 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் (blue bird) செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது...ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள், எல்.வி.எம்-3 ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது...
- குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்..2040-க்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
- டெல்லியில் 12 ஆயிரத்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது...இந்த விரிவாக்கத்தின் மூலம் டெல்லி மெட்ரோ கட்டமைப்பின் மொத்த தூரம் 400 கிலோமீட்டராக அதிகரிக்கும்
- மத்திய கூட்டுறவுத்துறை சார்பில் விரைவில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்...பயணிகளின் வசதியையும், ஓட்டுநர்களின் லாபத்தையும் பாரத் டாக்ஸி மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்...
- பொங்கல் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்ல 40 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..ஒரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
- அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வால்வோ சொகுசு பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...34 கோடி ரூபாய் செலவில் 20 சொகுசு பேருந்துகளின் சேவை தொடங்கி உள்ளது
- 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு...சென்னை, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...