பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அளித்த ஒப்புதலின் படி சுமார் 16 கிலோ மீட்டர் துரத்திற்கு டெல்லி மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 13 ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் இந்த புதிய வழித்தடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து,
மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.