ஏன் நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது... டெல்லியில் உள்ள மக்கள் மட்டும் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்...
குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஒரு டயர் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... 75 பயணிகளுடன் விமானம் புறப்பட்ட போது, டயர் கழன்று விழுந்த நிலையில், மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது..
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்தது... ஒரு சவரன் 81 ஆயிரத்து 920க்கும், ஒரு கிராம் 10,240க்கும் விற்பனையாகிறது...
இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்... டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்...
குடியரசு துணை தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்... முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்...
2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வன்முறைக்கு பின், பிரதமர் மோடி முதல்முறையாக மணிப்பூருக்கு செல்கிறார்... நாளை முதல் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூரில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்...
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் அவரை திட்டுவது போல உருவகப்படுத்தி ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது... பீகார் காங்கிரஸ் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது...
நேபாளத்தின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், அந்நாட்டு குடியரசு தலைவருடன் ராணுவ தளபதி சந்திப்பு... ஜென் z அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது..
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்தது... தீவைப்பு சம்பவத்தால் மட்டும் 21 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது...