காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2025) | Thanthi TV

Update: 2025-07-15 05:52 GMT
  • இந்திய வாகன விற்பனை சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்த டெஸ்லா..டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஷோ ரூம் மும்பையில் திறப்பு...
  • இந்தியா-பாகிஸ்தான் சண்டை இன்னும் ஒரு வாரம்நீடித்திருந்தால் அணு ஆயுதப்போராக மாறியிருக்கும்...வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவேன் என கூறியதும், இரு நாடுகளும் சண்டையை கைவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 
  • சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் மனைவி கண் முன்னே மாரடைப்பால் உயிரிழந்த கணவர்...ஓ.எம்.ஆரில் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தபோதே உயிரிழந்த சோகம்...
  • கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததன் எதிரொலி...தமிழக - கேரள எல்லையான கூடலூரில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு...
  • நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு...லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
  • வேட்டுவம் படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ்...சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் அஞ்சலி...
  • குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...
  • மறைந்த நடிகை சரோஜா தேவிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு...சொந்த ஊரான தசவாரா கிராமத்தில் அவரது தாயாரின் நினைவிடத்திற்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு...
  • கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்...அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல, நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்...
  • காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சிதம்பரம் அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...
  • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்...முகாம்களில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு...
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீர‌ர் சுபான்ஷு சுக்லா...
  • 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை சிதம்பரத்தில்தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
Tags:    

மேலும் செய்திகள்