முழு சந்திர கிரகணம் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழ உள்ளது... நாடு முழுவதும் தென்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயிலில் நடை அடைப்பு... தஞ்சை, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களிலும் நடை அடைக்கப்பட்டுள்ளது...
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது...
மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது... ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்தது...
ஜெர்மனி, இங்கிலாந்தில் ஒரு வார அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
முன்னாள் எம்.பி. சத்தியபாமா அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்துள்ளார்... செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், சத்தியபாமா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வந்து கொண்டிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்... நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...
செங்கோட்டையனை நிச்சயம் சந்தித்து பேசுவேன் என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்... அதிமுகவை ஒருங்கிணைக்க எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்...
நயினார் நாகேந்திரனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்... கூட்டணியில் இருந்து அமமுக வெளியேற வேண்டுமென, நயினார் நாகேந்திரன் திட்டமிட்டு செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
செங்கோட்டையனை இயக்குவது சசிகலா தான் என தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்... பொதுச்செயலாளருக்கு காலக்கெடு விதிப்பதற்கு செங்கோட்டையனுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்...
விஜய் உடன் கூட்டணியா என்பது குறித்து ஜனவரி 9ஆம் தேதி தெரியவரும் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.. விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்..