ஸ்கேட்டிங்கில் சேட்டை செய்த இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2025-07-14 12:40 GMT

கொண்டை ஊசி வளைவு சாலைகளில், ஆபத்தான முறையில் சிலர் ஸ்கேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலை, அதிக கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைத்தொடராக உள்ளது. இந்நிலையில் வட இந்தியாவை சேர்ந்த சிலர் கொல்லிமலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்துள்ளனர். தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்ய முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இது தொடர்பன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைத்தொடர்களில் ஸ்கேட்டிங் செய்வதற்கு வனத்துறை சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படாத நிலையில், இளைஞர்கள் ஸ்கேட்டிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்