திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் நேர்ந்த சோகம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இரண்டு நாட்களில் திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலக ஊழியரான ஜெனிபர் வீட்டிலிருந்து அஞ்சலகம் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.