போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள்.. நாளை பேச்சுவார்த்தை

Update: 2025-12-15 11:35 GMT

அமைச்சரின் பேச்சு வார்த்தைக்குப்பின் டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அமைச்சர் முத்துசாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்