``எங்க வீட்டுக்காரர ஏன் கேட்குறீங்க.. அதிகாரிகளை கேளுங்க..’’ Erode மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
மேயர் - திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இக் கூட்டத்தில் பேசிய திமுக வார்டு கவுன்சிலர்கள், தங்கள் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எந்த தகவலும் வருவதில்லை என குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் நாகரத்தினம், அவரவர் தொகுதிகளுக்கு மட்டும் கேள்வி எழுப்புங்கள் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.