10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - காவலர் கைது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரம்மதேசம் காவலர் இளங்கோவை திண்டிவனம் மகளிர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆண் நண்பருடன் சென்ற மாணவியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இளங்கோ பிடித்து, ஆண் நண்பரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் பிறகு மாணவியை காவல்நிலையம் அழைத்து செல்வதாக கூறி, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற காவலர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பைக்கில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மாணவி எச்சரித்தை தொடர்ந்து, காவலர் பேருந்தில் ஏற்றி மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு காவலர் இளங்கோவை கைது செய்தனர்.