குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது வெளியேறிய கழிவுநீர்-தீயாய் பரவும் வீடியோ
தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டியை பொதுமக்கள் தாமாக முன்வந்து சுத்தம் செய்தனர். அப்போது சாக்கடை போன்று கழிவுநீர் வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.