வேலூர் அருகே ஆய்வு செய்ய வந்த வட்டாட்சியரை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அங்கு ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியரை மறித்து, கிராம மக்கள் வாக்குவாதம் செய்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வட்டாட்சியர் உத்தரவாதம் அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.