சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத பவளவண்ண பெருமாள் காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய உற்சவரை நான்கு மாட வீதிகளில் தோளில் தூக்கியபடி ஸ்ரீ பாதம் தாங்கிகள் வலம் வந்தனர்