ஜமாபந்தி குறைதீர் முகாமில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி
கிருஷ்ணகிரியில், ஜமாபந்தி குறைதீர் முகாமின் போது லஞ்சம் பெற்றதாக, கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது நிலப் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்தார். அப்போது, வீரனகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவன், பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய, வடிவேலிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்றார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் அகத்தூயவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.