#JUSTIN || மீண்டும் கல்லால் தாக்கப்பட்ட Vande Bharat - ரயிலில் பயணித்த குழந்தை காயம்
ரயிலில் பயணம் செய்த குழந்தை காயம்.
வடமாநிலங்களில் பந்தே பாரத் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் இரயில் ராய்பிரேலி அருகே சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.
இந்தக் கல் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியின் மீது பட்டு கண்ணாடியை உடைத்து கொண்டு ரயிலுக்கு உள்ளே பயணம் செய்த சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்துள்ளார்.